சிக்கன்ன கவுடா வெற்றிபெற வேண்டி வாக்குச்சாவடி மையத்துக்கு பூஜை செய்த பா.ஜனதா தொண்டர் தேர்தல் அதிகாரி விசாரணை
குந்துகோல் தொகுதியில், சிக்கன்ன கவுடா வெற்றிபெற வேண்டி வாக்குச்சாவடி மையத்துக்கு பா.ஜனதா தொண்டர் ஒருவர் பூஜை செய்தார். இதுபற்றி தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.
உப்பள்ளி,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த உமேஷ் ஜாதவ், மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோல் தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரசைச் சேர்ந்த சி.எஸ்.சிவள்ளி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதனால் சட்டசபையில் இந்த 2 தொகுதிகளும் காலியாகின. அதன்பேரில் இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்பேரில் நேற்று குந்துகோல் மற்றும் சிஞ்சோலி தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் குந்துகோல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மறைந்த சி.எஸ்.சிவள்ளியின் மனைவி குசுமாவதி போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சிக்கன்ன கவுடா போட்டியிட்டு இருக்கிறார். இவர்கள் தவிர 8 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் குந்துகோல் தொகுதியில் ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவுக்காக குந்துகோல் தொகுதியில் 214 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 65-வது வாக்குச்சாவடி மையத்துக்கு நேற்று காலையில் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பு பா.ஜனதா ஆதரவாளர் ஒருவர் தனது மனைவியுடன் வந்தார்.
பின்னர் அவர் வாக்குச்சாவடி மையத்தின் நுழைவு வாயில் உள்பட அனைத்து இடங்களிலும் பூமாலைகளை கட்டினார். பின்னர் ஓட்டுப்பதிவு அறையின் கதவு முன்பு மஞ்சள், குங்குமம், எலுமிச்சை பழங்கள் ஆகியவற்றை வைத்து தேங்காய் ஒன்றை உடைத்து தீபாராதனை காட்டி பூஜை செய்து வழிபட்டார். பின்னர் அங்குள்ள தேர்தல் பணியாளர்களுக்கு தீபாராதனை காட்டினார்.
இதுபற்றி அந்த நபரிடம் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், ‘‘நான் பா.ஜனதாவின் தீவிர தொண்டன். இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் சிக்கன்ன கவுடா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டேன். என்னுடைய பூஜை நல்ல பலன் அளிக்கும்’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அந்த நபரின் இந்த வினோத செயல் அங்கிருந்த அனைவரையும் வியக்க வைத்தது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது. ஏனெனில் வாக்குச்சாவடிக்கு பூஜைகள் செய்வது, அத்துமீறி உள்ளே நுழைவது போன்றவை தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும். அதனால் இச்சம்பவம் குறித்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் குந்துகோல் தொகுதி தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story