மாவட்ட செய்திகள்

ஆற்காட்டில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் நகை – பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + "||" + Jewelry home in Travels owner in Arcot - money theft Bridging the mystery people

ஆற்காட்டில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் நகை – பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஆற்காட்டில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் நகை – பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஆற்காட்டில் டிராவலஸ் உரிமையாளர் வீட்டில் நகை – பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆற்காடு, 

ஆற்காட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் அருளரசன் (வயது 44), டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 18–ந் தேதி அருளரசன் தனது குடும்பத்தினருடன் காரில் சிகிச்சைக்காக பெங்களூரு சென்றுள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் குடியிருந்து வரும் நவீன் என்பவர் செல்போன் மூலம் அருளரசனை தொடர்பு கொண்டு உங்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் அருளரசன் வீட்டிற்கு வந்து பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 7 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.27 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் ஆகியற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கமாக மாடிக்கு சென்று பின்னர் முதல் மாடியில் உள்ளவர்களின் வீட்டு கேட்டை தாழ்பாள் போட்டுவிட்டு கீழே இறங்கி வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து அருளரசன் ஆற்காடு டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கூடலூரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தொழிலாளி கைது
கூடலூரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
2. மல்லசமுத்திரம் அருகே, அடுத்தடுத்து 3 வீடுகளில் 15½ பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
மல்லசமுத்திரம் அருகே, அடுத்தடுத்து 3 வீடுகளில் 15½ பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. ஓடும் பஸ்சில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் திருட்டு
ஓடும் பஸ்சில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் திருட்டுபோனது.
4. வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகை-வெள்ளி கொலுசுகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வேலாயுதம்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகை-வெள்ளி கொலுசுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. லால்குடி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு மற்றொரு வீட்டில் உணவை ‘ருசி’ பார்த்த மர்ம நபர்கள்
லால்குடி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருடிய மர்ம நபர்கள் மற்றொரு வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை ‘ருசி’ பார்த்தனர்.