மாவட்ட செய்திகள்

7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்தது + "||" + A letter to the governor for the release of 7 people On behalf of the Democratic Youth Association

7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்தது

7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்தது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை ஜனநாயக வாலிபர் சங்கம் நேற்று நடத்தியது.

சேலம், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக கவர்னர் முடிவெடுத்து அறிவிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் மாநில அரசின் பரிந்துரைப்படி 7 பேரையும் கவர்னர் விடுவிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

அதன்படி சேலம் வடக்கு மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து கவர்னருக்கு கடிதங்களை எழுதி அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், மாநகர தலைவர் சதீஷ், செயலாளர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் இந்த கோரிக்கை தொடர்பாக கவர்னர் அலுவலக முகவரிக்கு 1,000 தபால் அட்டைகளை அங்குள்ள தபால் பெட்டியில் போட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் ஓட்டேரியில் குப்பைகளுக்கு தீவைக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு திடக்கழிவு மேலாண்மை கிடங்கை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; பலி எண்ணிக்கை 93 ஆக உயர்வு
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதில் பலியானோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்து உள்ளது.
3. 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடுகோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.
4. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கல்லூரி மாணவி - உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மகிழ்ச்சி
சாலையை சீரமைக்கக்கோரி, பிரதமர் மோடிக்கு கல்லூரி மாணவி ஒருவர் கடிதம் எழுதினார். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவர் மகிழ்ச்சி அடைந்தார்.
5. கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில், இந்து முன்னணியினர் காத்திருக்கும் போராட்டம்
கோவில் சொத்துகளை மீட்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை