குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்


குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 May 2019 4:15 AM IST (Updated: 21 May 2019 12:10 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

திருவாரூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர், நாகை மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருவாரூரில் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராசு கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

குடிநீர் தட்டுப்பாடு

தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதாலும், காவிரி நீர் கிடைக்காததாலும் ஆறுகள், வாய்க்கால், குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீர் மட்டம் கிடு, கிடுவென குறைந்து ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை போக்க தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாத்து குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரைஅருள்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story