மாவட்ட செய்திகள்

பிரியாணி கடையில் தகராறு: ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது + "||" + The dispute at the Briani store: Four people killed by auto driver

பிரியாணி கடையில் தகராறு: ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது

பிரியாணி கடையில் தகராறு: ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது
திருச்சியில் பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி,

திருச்சி மண்ணச்சநல்லூர் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா(வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை திருவானைக்காவலில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சவாரி சென்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர் களுக்கு அருகே உள்ள கடையில் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், பிரியாணி தீர்ந்து விட்டதால் நிகழ்ச்சியை நடத்தியவர்களின் உறவுக்கார பெண் ஒருவரும், ஆட்டோ டிரைவர் அப்துல்லாவும் பிரியாணி வாங்க அந்த கடைக்கு சென்றனர்.


அங்கிருந்த கடை ஊழியர்களிடம் ஆர்டர் கொடுத்த அளவுக்கு பிரியாணி வழங்கப்படவில்லை என்று கூறி அந்த பெண் சத்தம்போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அதே ஓட்டலில் ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நாகராஜ்(39) சாப்பிட்டு கொண்டு இருந்தார். அவர் அந்த பெண்ணிடம் ஏன் இப்படி சத்தம் போடுகிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால், அந்த பெண்ணுக்கும் நாகராஜிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் அந்த பெண் மீது இடித்துள்ளார்.

இதனை கண்ட ஆட்டோ டிரைவர் அப்துல்லா, நாகராஜை தாக்கி உள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற நாகராஜ் தனது நண்பர்கள் 3 பேருடன் பிரியாணி கடைக்கு வந்தார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த அப்துல்லாவை மரப்பலகை மற்றும் கைகளால் 4 பேரும் சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த அப்துல்லா திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து அப்துல்லாவை கொலை செய்ததாக ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நாகராஜ், கோகுல்நாத், தயாளன்(23), முன்னா(22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் 2½ வயது சிறுமி கொலையில் மாமா கைது
கோவை விளாங்குறிச்சியில் 2½ வயது சிறுமி கொலை வழக்கில் சிறுமியின் மாமா கைது செய்யப்பட்டு உள்ளார்.
2. சிகிச்சைக்கு அழைத்து சென்ற மருமகளை பண்ணை வீட்டில் வைத்து கற்பழித்த மாமனார் கைது
மகாராஷ்டிராவில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற மருமகளை பண்ணை வீட்டில் வைத்து கற்பழித்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
3. முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ அதிகாரி கைது
சுவாமிமலை முருகன் கோவிலில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ அதிகாரி மணக்கோலத்தில் கைது செய்யப்பட்டார்.
4. ஈரோட்டில் சிறுமி பாலியல் பலாத்காரம்: செல்போன் மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது
ஈரோட்டில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செல்போன் மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
5. புதுச்சேரி கடைகளில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து திருடிய 2 வாலிபர்கள் கைது
புதுச்சேரி கடைகளில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து திருடிய சென்னையை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.