மருத்துவ மேல் படிப்பு இடஒதுக்கீடு : அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்


மருத்துவ மேல் படிப்பு இடஒதுக்கீடு : அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்
x
தினத்தந்தி 21 May 2019 5:45 AM IST (Updated: 21 May 2019 4:56 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ மேல் படிப்பு இடஒதுக்கீடு அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மும்பை,

மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு மாநில அரசு சட்டம் நிறைவேற்றியது. இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டுக்கான மருத்துவ மேல்படிப்பு மாணவர் சோக்கையில் மராத்தா சமூக மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனினும் மருத்துவ மேல் படிப்பில் மராத்தா சமூக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை மும்பை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.

இதையடுத்து மாநில அரசு மராத்தா சமூக மாணவர்களுக்கு மருத்துவ மேல் படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அந்த அவசர சட்டத்துக்கு மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்து உள்ளார்.

Next Story