காஞ்சீபுரம் அருகே ஓட்டு எண்ணும் மையத்தில் ஏற்பாடுகள் தீவிரம்


காஞ்சீபுரம் அருகே ஓட்டு எண்ணும் மையத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 21 May 2019 10:30 PM GMT (Updated: 21 May 2019 4:41 PM GMT)

காஞ்சீபுரம் அருகே ஓட்டு எண்ணும் மையத்தில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே பொன்னேரிக்கரையில் அண்ணா உறுப்பு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணும் பணியும், திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஓட்டு எண்ணும் பணியும் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

மேலும், ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பொன்னையா, வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நாகராஜன், காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் அடிக்கடி சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

அண்ணா உறுப்பு கல்லூரிக்கு செல்லும் பிரதான வழியில் மாவட்ட கலெக்டர், அரசு உயர் அதிகாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த கேட்டில் ஓட்டு மைய முகவர்கள் உள்பட பலர் அனுமதிக்கப்படுவார்கள். 3-வது கேட்டில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்டத்தில் உள்ள தாசில்தார்கள், வருவாய் கோட்ட அலுவலர்கள் மற்றும் வருவாய்துறையினர் ஓட்டு எண்ணும் பணிக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story