ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு தபால் அட்டை


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு தபால் அட்டை
x
தினத்தந்தி 21 May 2019 10:45 PM GMT (Updated: 21 May 2019 7:08 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய கோரி கவர்னருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தபால் அட்டை அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர்,

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 28 ஆண்டுகள் சிறையில் உள்ள பேரறி வாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடந்தது. அந்த தபால் அட்டைகளில், அரசியலமைப்பு சட்டம் 161-வது பிரிவு தங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி பேரறி வாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர தலைவர் காதர், மாவட்ட செயலாளர் அருளரசன் மற்றும் நிர்வாகிகள் இந்த அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story