மாவட்ட செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.83¼ லட்சம் 2 கிலோ தங்கமும் கிடைத்தது + "||" + Samayapuram Mariamman temple bill The offering was Rs.83 lakhs and 2 kg of gold

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.83¼ லட்சம் 2 கிலோ தங்கமும் கிடைத்தது

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.83¼ லட்சம் 2 கிலோ தங்கமும் கிடைத்தது
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.83¼ லட்சமும், 2 கிலோ தங்கமும் கிடைத்தது.
சமயபுரம்,

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். பவுர்ணமி, அமாவாசை, செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கை பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.


அதன்படி இந்த மாதம் இரண்டாவது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருச்சி மலைக்கோட்டை உதவி ஆணையர் விஜயராணி, உறையூர் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் க.ஞானசேகரன், கோவில் மேலாளர் ஹரிஹர சுப்ரமணியன், மணப்பாறை கோவில் ஆய்வாளர் பிரேமலதா ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.

ரூ.83¼ லட்சம்

இதில், காணிக்கையாக ரூ.83 லட்சத்து 37 ஆயிரத்து 782-ம், 2 கிலோ 262 கிராம் தங்கமும், 9 கிலோ 659 கிராம் வெள்ளியும், மேலும் வெளிநாட்டு பணம் 64 கிடைத்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அம்மன் அருள், ஆத்ம சங்கம், அய்யப்ப சேவா சங்கத்தை சேர்ந்தவர்களும், சமயபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தோவாளை கிருஷ்ணன்புதூர் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹார விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
தோவாளை கிருஷ்ணன்புதூர் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹார விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2. திருக்கோடீஸ்வரர் கோவிலில் திரிபுரசுந்தரி அம்மன், பெருமாளாக காட்சி தரும் உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்
திருக்கோடீஸ்வரர் கோவிலில் திரிபுரசுந்தரி அம்மன், பெருமாளாக காட்சி தரும் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3. மகாளய அமாவாசையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா திரளான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று சமய புரத்தில் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
4. சேலத்தில் வெவ்வேறு இடங்களில் கோவில், ஜவுளிக்கடையில் நகை, பணம் திருட்டு
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் கோவில், ஜவுளிக்கடையில் நகை, பணம் திருட்டு போனது.
5. வெள்ளியணை மாரியம்மன் கோவில் சுற்றுப்பொங்கல் விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
மாரியம்மன் கோவில் சுற்றுப்பொங்கல் விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.