மாவட்ட செய்திகள்

பள்ளியில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி ஆசிரியர்கள் 2 பேர் மீது வழக்கு + "||" + The woman has filed a case against two persons for allegedly fraudulent Rs 14 lakh

பள்ளியில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி ஆசிரியர்கள் 2 பேர் மீது வழக்கு

பள்ளியில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி ஆசிரியர்கள் 2 பேர் மீது வழக்கு
பள்ளியில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த ஆசிரியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள கக்கன் காலனியை சேர்ந்தவர் சிங்கராஜன். இவருடைய மகள் மகாலட்சுமி (வயது 28). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கரநாராயணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தந்தை யுடன் வசித்து வருகிறார்.


சங்கரநாராயணன் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவருடன் அதே பள்ளியில் பணியாற்றி வருபவர் தேன்மொழி. இவர்கள் இருவரும் மகாலட்சுமியிடம் அதேபள்ளியில் ஆசிரியை பணி வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் என்றும் கூறினர்.

ரூ.14 லட்சம் மோசடி

இதனை நம்பி மகாலட்சுமி கடந்த 2016-ம் ஆண்டு ரூ.14 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். பணத்தை பெற்று கொண்ட பிறகு, அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுபற்றி கேட்டபோது, இருவரும் முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து மகாலட்சுமி திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் ஆசிரியர்களான சங்கரநாராயணன், தேன்மொழி ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2. கடன் தொகையை செலுத்திய பின்பும் அடகு வைத்த பத்திரத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி; நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய நிலையில், அடகு வைத்த பத்திரத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மேலாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3. வெள்ளோடு அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி; தந்தை– மகன் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
வெள்ளோடு அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. நீட் தேர்வு தொடர்பான வழக்கு: டெல்லி ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை
நீட் தேர்வு தொடர்பான வழக்கில், டெல்லி ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது.
5. புகார்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது : ரூ.1,230 கோடி மோசடி வழக்கில் நகைக்கடை, தலைமை அலுவலகத்துக்கு ‘சீல்’
ரூ.1,230 கோடி மோசடி வழக்கில், புகார்களின் எண்ணிக்கை இதுவரை 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய மன்சூர் கானின் நகைக்கடை மற்றும் தலைமை அலுவலகத்துக்கு போலீசார் ‘சீல்’ வைத்தனர். மேலும் விமான நிலையத்தில் நின்ற அவருடைய சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.