சிவகங்கை-காரைக்குடி பகுதியில், கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


சிவகங்கை-காரைக்குடி பகுதியில், கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 21 May 2019 10:15 PM GMT (Updated: 21 May 2019 8:57 PM GMT)

சிவகங்கை மற்றும் காரைக்குடி பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை, 

சிவகங்கை அருகே மதகுபட்டி பூங்குன்ற அய்யனார் கோவில் பால்குட விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மதகுபட்டி-ஒக்கூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 16 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றன.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை காடனேரி நந்தகுமார்கேசவன் வண்டியும், 2-வது பரிசை கிடாரிப்பட்டி தேர்கொண்டகருப்பர் வண்டியும், 3-வது பரிசை காளாப்பூர் தமிழ்மணி வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பாகனேரி ஆனந்தபார்த்திபன் வண்டியும், 2-வது பரிசை கூத்தாண்டம் நாச்சரம்மாள் மதிதுரைசிங்கம் வண்டியும், 3-வது பரிசை அழகாபுரி சோலைச்சாமி வண்டியும் பெற்றன.

இதேபோல் காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை அருகே மித்திரங்குடி முத்துமாரியம்மன் கோவில் சந்தனகாப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மித்திரங்குடி-செங்கரை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 45 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடு மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றன.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கண்டனூர்பாலையூர் காளியம்மன் வண்டியும், 2-வது பரிசை பாலக்குடிப்பட்டி கருப்பர்ராக்கம்மாள் வண்டியும், 3-வது பரிசை பொய்யாதநல்லூர் அப்பாஸ் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை காயக்காடு ரமேஷ் வண்டியும், 2-வது பரிசை மஞ்சக்கரை ரவி வண்டியும், 3-வது பரிசை பீர்க்கலைக்காடு எஸ்.பி.ஆர் வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயம் இருபிரிவாக நடைபெற்றது. இதில் முதல் பிரிவில் முதல் பரிசை பூக்கொல்லை ரித்திஷ் வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகினி மற்றும் பாப்பான்வயல் ஜெயஸ்ரீ வண்டியும், 3-வது பரிசை எஸ்.பி.பட்டணம் தமீம் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற 2 வது பிரிவில் முதல் பரிசை கே.ஆத்தங்குடி கண்ணாத்தாள் வண்டியும், 2-வது பரிசை வெல்லாம்பெரம்பூர் வீரமுனி ஆண்டவர் வண்டியும், 3-வது பரிசை நாட்டரசன்கோட்டை கதிரவன் வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story