ஹீரோ பிளெஷர் பிளஸ் அறிமுகம்
மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இப்போது பிளெஷர் மாடலில் மேம்படுத்தப்பட்ட ரகத்தை ‘பிளஷர் பிளஸ்’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.47,300 ஆகும். இதில் அலாய் சக்கரங்களைக் கொண்ட மாடலின் விலை ரூ.49,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் 110.9 சி.சி. என்ஜினைக் கொண்டதாக வந்துள்ளது.
இந்நிறுவனம் பெண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைத்த மாடல் இது. தனது கொள்கையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல், பெண் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டே மேம்படுத்தப்பட்ட மாடலை உருவாக்கிஉள்ளது இந்நிறுவனம்.
ஒற்றை சிலிண்டர் மோட்டாரைக் கொண்ட இந்த ஸ்கூட்டர் 8.1 ஹெச்.பி. திறன் மற்றும் 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. இந்த மாடல் யமஹா பாசினோ (ரூ.55,625), ஹோண்டா டியோ (ரூ.53,000) ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story