வானவில் : நீரில் சைக்கிள் ஓட்டலாமா ?


வானவில் :  நீரில் சைக்கிள் ஓட்டலாமா ?
x
தினத்தந்தி 22 May 2019 11:59 AM IST (Updated: 22 May 2019 11:59 AM IST)
t-max-icont-min-icon

தரையில் சைக்கிள் ஓட்டி பார்த்திருப்போம். தண்ணீரில் ஓட்டி பார்த்திருக்கிறீர்களா?

தண்ணீரில் ஓட்டி பார்த்திருக்கிறீர்களா? இது எப்படி சாத்தியம் என்று நம்மை வியக்க வைக்கிறது இந்த நீரில் இயங்கும் சைக்கிள். உடற்பயிற்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த சைக்கிள் மண்டா 5 ( MANTA 5 ) என்றழைக்கப்படுகிறது.

ஏரிகள், ஆறுகள் மட்டுமின்றி கடலிலும் இந்த வண்டியை செலுத்த முடியும். மணிக்கு பத்தொன்பது கிலோ மீட்டர் வரை செல்லும் இந்த சைக்கிளை எதிர்த்து வரும் தண்ணீரை மீறி செலுத்துவது சவாலான விஷயம். இதற்கென சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள சக்கரங்கள் தண்ணீரின் வேகத்தில் மிதிவண்டியை செலுத்த உதவும். மிதித்து செலுத்துவது முடியாத பட்சத்தில் ஒரு என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது.

அதை உபயோகித்து வாட்டர் ஸ்கூட்டர் போன்று செலுத்திக் கொள்ளலாம். சக்தி வாய்ந்த இந்த மோட்டார் சத்தமில்லாமல் இருக்கிறது. இந்த உடற்பயிற்சி மிதிவண்டியை ஓட்டுவதற்கு தனியாக பயிற்சி ஏதும் எடுக்க வேண்டியதில்லை. வெகு விரைவிலேயே கற்றுக் கொள்ளலாம். இந்த சைக்கிளை தனித் தனியாக கழற்றி பயணங்களின் போது உடன் எடுத்து செல்லலாம்.


Next Story