ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
பொன்னேரியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
செங்குன்றம்,
பொன்னேரி சக்தி நகரில் வசிப்பவர் சந்துருகுமார் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் சென்னையில் உள்ள மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றார்.
இந்த நிலையில் சந்துருகுமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நேற்று திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சந்துருகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே வீட்டின் உரிமையாளர் வந்தபோது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்கநகைகள், 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து பொன்னேரி போலீசில் சந்துருகுமார் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story