தேன்கனிக்கோட்டையில் ஏரியில் தண்ணீர் குடிக்க சென்ற புள்ளிமான் நாய்கள் கடித்து செத்தது
தேன்கனிக்கோட்டையில் ஏரியில் தண்ணீர் குடிக்க சென்ற புள்ளிமானை நாய்கள் கடித்ததில் அது பரிதாபமாக செத்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சுற்று
வட்டாரத்தில் வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன.
தேன்கனிக்கோட்டை பகுதியில் இந்த ஆண்டு கடுமையான
வறட்சி காணப்படுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை
காணப்படுகிறது. கடும் வறட்சியால் வனப்பகுதியில் போதிய
தண்ணீர் இல்லாததால் யானைகள், காட்டு எருமைகள்,
மான்கள் ஆகியவை குடிநீருக்காக கிராமங்களை நோக்கி
வருகின்றன. இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை
வனப்பகுதியிலிருந்து குடிநீருக்காக தேன்கனிக்கோட்டை
நகரிலுள்ள தேர்பேட்டை ஏரிக்கு 5 வயதுள்ள புள்ளிமான்
ஒன்று நேற்று வந்தது. அந்த மானை தெருநாய்கள் கூட்டம்
கடித்து குதறிது. இதில் புள்ளிமான் பலத்த காயம் அடைந்து
தப்பி ஓடியது. ஆனாலும் சிறிது தூரம் ஓடிய அந்த
புள்ளிமான் மயங்கி விழுந்து பரிதாபமாக செத்தது.
சாலையோரத்தில் மான் உயிரிழந்து கிடப்பதை பார்த்த
பொதுமக்கள் இது குறித்து தேன்கனிகோட்டை
வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ
இடத்திற்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் புள்ளிமானின்
உடலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்று
பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் வனப்பகுதியில்
புதைத்தனர்.
Related Tags :
Next Story