தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளிடம் செல்போன்கள் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது


தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளிடம் செல்போன்கள் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 May 2019 4:00 AM IST (Updated: 23 May 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளிடம் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3¼ லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பர்கூர், 

கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 

கந்திகுப்பம், பர்கூர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் 

செல்பவர்களிடம் கடந்த 2 மாதங்களாக மர்ம நபர்கள் 

செல்போன்கள் திருடி செல்வதாக புகார்கள் வந்தன. 

இதையடுத்து பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு 

ராஜேந்திரன் மேற்பார்வையில் பர்கூர் இன்ஸ்பெக்டர் 

செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரைசெல்வி ஆகியோர் 

தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் 

ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று 

தனிப்படை போலீசார் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி பகுதியில் 

ரோந்து சென்ற போது, சந்தேகத்திற்கிடமாக வந்த 4 பேரை 

பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகம் 

அடைந்த போலீசார் கந்திக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு 4 

பேரையும் அழைத்து சென்று விசாரித்ததில், தேசிய 

நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் 

செல்பவர்களிடம் இருந்து அவர்கள் செல்போன்கள் திருடியது 

தெரியவந்தது. இதனை தொடர்ந்து செல்போன் திருட்டில் 

ஈடுபட்ட கிருஷ்ணகிரி நகர் திருவண்ணாமலை சாலையை 

சேர்ந்த இம்ரான்(21), 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது 

செய்தனர். மேலும், அவர்களிடம் சுமார் ரூ.3.40 லட்சம் 

மதிப்புள்ள 40 செல்போன்களை போலீசார் பறிமுதல் 

செய்தனர்.
1 More update

Next Story