கால்நடைகளுக்கான கோடைகால பராமரிப்பு முறைகளை முழுமையாக கடைபிடியுங்கள் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வேண்டுகோள்

கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுக்கான கோடைகால பராமரிப்பு முறைகளை முழுமையாக கடைபிடித்து தங்கள் கால்நடைகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ளவேண்டும் என சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம்,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி
இருப்பதாவது:-
கால நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறிப்பாக உயர்
வெப்பம் கால்நடைகளில் பெருமளவில் உற்பத்தி
குறைபாட்டையும் , உயிர் இழப்பையும் ஏற்படுத்துகின்றன.
வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகள்
அதிகமாக தண்ணீர் பருகுதல்.
பசியின்மை.
அதிக அளவில் உமிழ்நீர் வடித்தல்.
வேகமாக மூச்சு விடுதல்.
உயர் வெப்ப நிலை.
கோடைகால பராமரிப்பு
கறவை மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 4 அல்லது 5
முறையாவது சுத்தமான குடிநீரை அளிக்க வேண்டும்.
மாடுகளை தண்ணீர் குடிக்க செய்யும் போது கலப்புத்
தீவனத்தை தண்ணீரின் மேல் சிறிதளவு தூவ வேண்டும்.
கால்நடை கொட்டகைகளில் நீர்தெளிப்பான் அமைத்தல்
குளிர்ந்த நீரை கால்நடைகளின் மேல் தெளித்தல், மின்
விசிறி அமைத்தல் போன்றவற்றின் மூலம் வெப்ப
அயர்ச்சியை குறைக்கலாம். மாடுகளை காலை 6 மணி முதல்
10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 7 மணி
வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். அசோலா,
ஹைட்ரோபோனிக் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம்
தீவன தேவைகளை பூர்த்தி செய்யலாம்.
ஆடுகளுக்கான கோடைகால பராமரிப்பு
ஆடுகளை காலை 6 முதல் 11 மணி வரையிலும் மாலை 3
முதல் 6 வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.
காய்ந்த மேய்ச்சல் நிலம் உள்ள பகுதிகளில் வேளாண் உபரி
பொருட்கள் மர இலை, ஊறுகாய் தீவனம், வெவ்வேல்
மற்றும் கருவேல் உலர் காய்கள் ஆகியவற்றை ஆடுகளுக்கு
வழங்கலாம். ஒரு ஆட்டிற்கு 8-12 லிட்டர் அளவிற்கு குடிநீர்
வழங்க வேண்டும். கொட்டகையின் மேல்கூரையில்
வைக்கோல் / தென்னங்கீற்றை பரப்பி அதன் மேல் தண்ணீர்
தெளிக்க வேண்டும்.
கோழிகளுக்கான கோடைகால பராமரிப்பு
கோழிகளுக்கு விடியற்காலை பொழுதிலும் இரவிலும்
விளக்கு ஒளியில் தீவனம் அளிக்க வேண்டும்.
கொட்டகையில் அதிகமான இடவசதி அளிக்க வேண்டும்.
வைட்டமின்.சி, பி.காம்ப்ளக்ஸ் , குளுக்கோஸ் போன்றவற்றை
அளிக்கலாம். வீட்டின் உயரம் ஓலைக்கூரை வீடுகளில்,
மத்தியில் 12 அடியாகவும், ஆஸ்பெஸ்டஸ் மற்றும் ஓட்டு
கூரைகளில் குறைந்தது 15 அடியாகவும் இருக்க வேண்டும்.
வெயில் காலங்களில் கால்நடைகளை கொண்டு செல்லும்
போது கவனிக்க வேண்டியது. நன்கு தெரிந்த வழியில் நிழல்
மற்றும் தண்ணீர் இருக்கும் ஓய்வு இடங்களை
குறித்துக்கொள்ளவும். வெயில் நேரங்களில் கால்நடைகளை
இடம் மாற்றம் செய்வதை தவிர்க்கவும். ஓய்வு இடங்களில்
வாகனத்தின் நிழலில் காற்றின் திசைக்கு எதிராக
நிறுத்தவும்.
கால்நடைகளுக்கு இடையில் நல்ல காற்றோட்டத்தை
உறுதிப்படுத்திட குறைவான எண்ணிக்கையில்
கால்நடைகளை ஏற்றவும். (85 விழுக்காடு மட்டும்).
எனவே, இக்கோடை காலத்தில் சேலம் மாவட்டத்தில்
கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுக்கான கோடைகால
பராமரிப்பு முறைகளை முழுமையாக கடைபிடித்து தங்கள்
கால்நடைகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்
கொள்ளவேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






