மாவட்ட செய்திகள்

ஊட்டியில் இருந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார் + "||" + From the ooty, Governor Panwarilal Puroit returned to Chennai

ஊட்டியில் இருந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார்

ஊட்டியில் இருந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார்
ஊட்டியில் இருந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார்.
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த 16-ந் தேதி ஊட்டிக்கு வந்தார். அவர் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து விட்டு ஊட்டியில் குதிரை பந்தயத்தை பார்வையிட்டார்.

பின்னர் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையம், அவலாஞ்சி, அப்பர்பவானி அணைகள், ஊட்டி படகு இல்லம் போன்ற இடங்களை கண்டு ரசித்தார்.

நேற்று முன்தினம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு சென்று விட்டு, மலை ரெயிலில் பயணித்தார். அன்று மாலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சி நிறைவு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு சிறந்த மலர் அலங்காரம் மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார். கடந்த 6 நாட்களாக ஊட்டி ராஜ்பவனில் கவர்னர் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டியில் இருந்து சென்னைக்கு திரும்பினார். அவருக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டின் கலைகள், பாரம்பரியத்தை கலைஞர்கள் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
நாட்டின் கலைகள், பாரம்பரியத்தை கலைஞர்கள் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
2. கவர்னர் பன்வாரிலால் புரோகித் 22-ந்தேதி நெல்லை வருகை - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்
நெல்லைக்கு 22-ந்தேதி (வியாழக்கிழமை) தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிறார். அவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
3. சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் புத்தகங்களை படிக்க வேண்டும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் புத்தகங்களை படிக்க வேண்டும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
4. மரபு நோயால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகள் உரிய மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
மரபு நோயால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகள் உரிய மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
5. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட, சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையத்தை கவர்னர் பார்வையிட்டார்
ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார்.