மதுபான பாரில் ஆபாச நடனம்: பார் அழகிகள் உள்பட 18 பேர் கைது
பால்கர் மாவட்டம் வசாயில் உள்ள ஒரு மதுபான பாரில், அழகிகளுடன் வாடிக்கையாளர்கள் ஆபாச நடனத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றப்பிரிவு போலீசுக்கு புகார் வந்தது.
மும்பை,
போலீசார் நேற்று முன்தினம் அந்த பாரில் சென்று அதிரடி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது, அரைகுறை ஆடைகள் அணிந்த அழகிகளுடன் வாடிக்கையாளர்கள் ஆபாசமாக நடனமாடி கொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த பார் மேலாளர், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பார் அழகிகள் என 18 பேரை கைது செய்தனர். இவர்களில் 13 பேர், பார் அழகிகள் ஆவர். போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story