மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செ.ராமலிங்கம் வெற்றி
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செ.ராமலிங்கம் வெற்றி பெற்றார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஆசைமணி, தி.மு.க. சார்பில் செ.ராமலிங்கம், அ.ம.மு.க. சார்பில் செந்தமிழன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரிபாயுதீன், நாம் தமிழர் கட்சி சார்பில் சுபாஷினி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கல்யாணசுந்தரம் மற்றும் சுயேச்சைகள் உள்பட 27 பேர் போட்டியிட்டனர்.
இவர்களில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணி, தி.மு.க. வேட்பாளர் செ.ராமலிங்கம் இடையே நேரடி போட்டி நிலவியது. ஓட்டு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. வேட்பாளர் செ.ராமலிங்கம் வெற்றி பெற்றார்.
ஓட்டு எண்ணிக்கை
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் நடந்தது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை தனித்தனி அறைகளில் நடந்தது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களின் அறை சீல் பிரிக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்பட்டன.
செ.ராமலிங்கம் வெற்றி
ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து சுற்று வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து இறுதி சுற்று வரை தி.மு.க. வேட்பாளர் செ.ராமலிங்கம் அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணியை விட அதிகம் ஓட்டுகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தார். மொத்தம் 22 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. முடிவில் தி.மு.க. வேட்பாளர் செ.ராமலிங்கம் 5,87,132 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க. அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் பெற்ற(21 சுற்றுகள் முடிவில்) ஓட்டுகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள் - 14,84,348
பதிவானவை - 10,91,921
செல்லாதவை - 537
1.செ.ராமலிங்கம்(தி.மு.க.) - 5,87,132
2ஆசைமணி(அ.தி.மு.க.) - 3,30,575
3.செந்தமிழன்(அ.ம.மு.க.) - 67,400
4.சுபாஷினி(நாம் தமிழர் கட்சி) - 39,887
5.ரிபாயுதீன்(மக்கள் நீதி மய்யம்) - 16,724
6.கல்யாணசுந்தரம்(பகுஜன் சமாஜ்) - 3,123
7 சுப்பிரமணி(சுயே) - 3,115
8.சுகுமாறன்(சுயே) - 2,413
9.சீனிவாசன்(சுயே) - 2,131
10.வில்வநாதன்(சுயே) - 1,575
11.ராஜசேகரன்(சுயே) - 1,297
12.தேவதாஸ்(சுயே) - 1,280
13.திருஞானசம்பந்தம்(சுயே) - 1,065
14.தட்சிணாமூர்த்தி(சுயே) - 1,009
15.கீர்த்திவாசன்(சுயே) - 891
16. ஹபீப்முகமது(சுயே) - 875
17.வாணிதாஸ்(சுயே) - 760
18.சண்முகம்(சுயே) - 718
19.அறவாழி(சுயே) - 598
20.சாமிதுரை(சுயே) - 92
21.திருநாவுக்கரசு(சுயே) - 467
22கண்ணபிரான்(சுயே) - 456
23.கண்ணன்(சுயே) - 423
24.ராஜேஷ்(சுயே) - 402
25.அப்துல்பாசித்(சுயே) - 357
26.அண்ணாதுரை(சுயே) - 321
27.ராஜன்(சுயே) - 257
நோட்டா - 8,068
42 ஆண்டுகளுக்கு பிறகு.....
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் செ.ராமலிங்கத்துக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெற்றி சான்றிதழை வழங்கினார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர், பகுஜன் சமாஜ் உள்பட 25 பேர் டெபாசிட் இழந்தனர்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 1967-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை தி.மு.க.வை சேர்ந்த சுப்பரவேலு எம்.பி.யாக இருந்தார். 1977-ம் ஆண்டுக்கு பிறகு 42 ஆண்டுகளாக தி.மு.க.வை சேர்ந்தவர் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் எம்.பி.யாக தேர்வு செய்யப்படவில்லை. தற்போது 42 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க.வை சேர்ந்த செ.ராமலிங்கம் மயிலாடுதுறை தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story