தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் நீலமேகம் வெற்றி
தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் நீலமேகம் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் காந்தியை 33 ஆயிரத்து 404 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஆர்.காந்தி, தி.மு.க. சார்பில் நீலமேகம், அ.ம.மு.க. சார்பில் ரெங்கசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்தி, மக்கள் நீதிமய்யம் சார்பில் துரைசாமி உள்பட 13 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது. மொத்தம் 14 மேஜைகளில் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் ஒட்டுகள் எண்ணப்பட்டன.
இதில் தி.மு.க. வேட்பாளர் நீலமேகத்துக்கு 1,896 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் காந்திக்கு 174 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் ரெங்கசாமிக்கு 179 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக்குக்கு 47 வாக்குகளும், மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் துரைசாமிக்கு 34 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர்கள் தினேஷ்பாபுவுக்கு 2 வாக்குகளும், பொன்.பழனிவேலுக்கு 1 வாக்குகளும் கிடைத்தன. நோட்டாவுக்கு 26 வாக்குகள் கிடைத்தன.
பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் முன்னணியில் இருந்தார். ஒவ்வொரு சுற்று முடிவிலும் அ.தி.மு.க. வேட்பாளரை விட 1000 ஓட்டுகளுக்கு மேல் தி.மு.க. வேட்பாளருக்கு அதிகமாக கிடைத்தது.
தி.மு.க. வெற்றி
21 சுற்றுகள் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் காந்தியை விட தி.மு.க. வேட்பாளர் நீலமேகம் 33 ஆயிரத்து 404 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஒவ்வொரு வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்- 2,77,269.
பதிவானவை- 1,91,877
செல்லாதவை-337
நீலமேகம் (தி.மு..க)- 87,826
காந்தி (அ.தி.மு.க.)- 54,422
ரெங்கசாமி (அ.ம.மு.க.)- 16,818
கார்த்தி (நாம் தமிழர் கட்சி)-11,014
துரைசாமி (மக்கள் நீதி மய்யம்)- 9,246
ரெங்கசாமி (சுயே.)- 495
சந்தோஷ் (சுயே.)-400
பொன்.பழனிவேல் (சுயே.)- 376
சரவணன் (சுயே.)- 333
செல்வராஜ் (சுயே.)-215
பாபுஜி (சுயே.)-199
தினேஷ்பாபு (சுயே.)- 139
சப்தகிரி (சுயே.)- 117
நோட்டா- 2,767
11 பேர் டெபாசிட் இழந்தனர்
அ.தி.மு.க. வேட்பாளர் காந்தியை தவிர அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமய்யம் உள்பட 11 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். மேலும் தஞ்சை சட்டசபை தொகுதியில் 6 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது. இதனால் அவற்றுக்குப்பதிலாக அந்த வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் எந்திரத்தில் இருந்த ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்பட்டன.
மேலும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் பதிவான 5 வி.வி.பேட் எந்திரங்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 5 எந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகளும் எண்ணப்பட்டன. இதனால் முடிவுகள் அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து வேட்பாளர்களின் ஓட்டு வித்தியாசம் மாறுபட வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story