மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால், காருக்குள் இருந்தபடி நகைக்கடை உரிமையாளர், தீக்குளித்து தற்கொலை + "||" + The borrower, the jeweler of the jeweler who was in the car, burned and committed suicide

கடன் தொல்லையால், காருக்குள் இருந்தபடி நகைக்கடை உரிமையாளர், தீக்குளித்து தற்கொலை

கடன் தொல்லையால், காருக்குள் இருந்தபடி நகைக்கடை உரிமையாளர், தீக்குளித்து தற்கொலை
கடன் தொல்லையால், காருக்குள் இருந்தபடி நகைக்கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 42). இவர் நாகை மாவட்டம், வாய்மேடு பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். இவருக்கு தொழிலில் ரூ.60 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடனை அடைக்க ஒரே வழி தனது குடும்பத்தினருடன் தான் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்துள்ளார்.


இந்த நிலையில் நேற்று செந்தில்குமார், தனது மனைவி மகாலெட்சுமி மற்றும் மகன், மகளுடன் காரில் வெளியே சென்றுள்ளார். காரில் சென்றபோது அவர், தனக்கு கடன் அதிகமாக உள்ளதால் நாம் அனைவரும் குடும்பத்துடன் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார். அதைக்கேட்டதும் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் கதறி அழுதுள்ளனர்.

தீக்குளித்து தற்கொலை

இதனால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்யும் முடிவை செந்தில்குமார் கைவிட்டார். பின்னர் அவர்களை எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு அழைத்து சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்த அவர், மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோரை வீட்டில் இறக்கி விட்டு விட்டு அதே காரில் முத்துப்பேட்டை அருகே பாண்டி சத்திரம் என்ற இடத்திற்கு வந்துள்ளார்.

அங்கு காரை நிறுத்தி விட்டு காருக்குள் இருந்தபடியே தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொண்டார். கார் தீப்பற்றி எரிந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் செந்தில்குமார் தீயில் கருகி கரிக்கட்டையாக கிடந்தார். காரும் எரிந்து நாசமானது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோதிவ்யன், இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சிவந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் தொல்லையால் நகைக்கடை உரிமையாளர் காருக்குள் அமர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விருத்தாசலம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் பெண் போலீசின் கணவர் தீக்குளிக்க முயற்சி
விருத்தாசலம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் பெண் போலீசின் கணவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
2. சிறையில் இருந்து பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதி மனைவியுடன் தற்கொலை
திருவாரூர் அருகே சிறையில் இருந்து பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
3. நாகர்கோவிலில் நகை பட்டறை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு
நாகர்கோவிலில் நகை பட்டறை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் அவர் விபரீத முடிவை தேடி கொண்டார்.
4. குடிக்க தண்ணீரில்லை, 3 மகள்களுடன் தற்கொலை செய்கிறேன் பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்
குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாத நிலையில் 3 மகள்களுடன் தற்கொலை செய்ய உள்ளேன், அனுமதியுங்கள் என விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
5. 6-வது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை : தின்தோஷி கோர்ட்டில் பரபரப்பு
6-வது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் தின்தோஷி கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.