கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் இந்திய வர்த்தக தொழிற் குழும கூட்டத்தில் தீர்மானம்


கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் இந்திய வர்த்தக தொழிற் குழும கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 23 May 2019 10:15 PM GMT (Updated: 23 May 2019 6:59 PM GMT)

கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய வர்த்தக தொழிற் குழும செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகப்பட்டினம்,

இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தின் செயற்குழு கூட்டம் நாகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சுபாஷ்சந்திரன், துணைத்தலைவர் மதியழகன், இணை செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொருளாளர் தர்மலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில் மதிவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வேளாண்மை கல்லூரி

நாகை-தஞ்சை புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும். அக்கரைப்பேட்டை பகுதியில் கடல் உணவு பொருட்களை பதப்படுத்தும் வகையில் கடல் உணவு மண்டலம் அமைத்திட வேண்டும்.

பரவை கிராமத்தில் காய்கறிகள் மொத்த விற்பனை நிலையம் அமைக்க வேண்டும். விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு பகுதியில் அனல்மின் நிலையம் அமைக்க வேண்டும். இந்திய வர்த்தக குழுமம் சார்பில், சென்னையில் உள்ள தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு ஆன்லைனில் வர்த்தகம் செய்வது எப்படி? என்பது குறித்த 3 நாட்கள் பயிற்சி முகாம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் இந்திய வர்த்தக குழுமத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story