மதுரை நாடாளுமன்ற தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றார்.
மதுரை,
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அ.தி.மு.க. சார்பில் ராஜ்சத்யன், தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன், மக்கள் நீதிமய்யம் சார்பில் அழகர், அ.ம.மு.க. சார்பில் டேவிட் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் பாண்டியம்மாள் ஆகியோர் போட்டியிட்டனர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் 26,485 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார்.
இவரை தொடர்ந்து ராஜ் சத்யன் 19,079 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் முதல் சுற்றிலேயே 7,406 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கடேசன் முன்னிலை பெற்றார்.
இரவு 10 மணிக்கு மொத்தம் 24 சுற்று முடிவுகள் தபால் ஓட்டுகளுடன் சேர்த்து எண்ணி அறிவிக்கப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் 4,47,075 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வதாக அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன் 3,07,680 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 3-வதாக அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை 85,747 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் அழகர் 85,048 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் 42,901 வாக்குகள் பெற்றார். நோட்டா பெற்ற வாக்குகள் 16,187. நோட்டா 5-வது இடம் பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காந்தி மியூசியம் அருகே ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story