சிவகங்கை தொகுதியில், எச்.ராஜாவை விட கார்த்தி சிதம்பரம் 3 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார்
சிவகங்கை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவை விட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று கார்த்தி சிதம்பரம் வெற்றிமுகத்தில் இருந்தார்.
சிவகங்கை,
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும், பா.ஜ.க. சார்பில் எச்.ராஜாவும், அ.ம.மு.க. சார்பில் தேர்போகி பாண்டியும், மக்கள் நீதி மய்யம் சார்பில் சினேகனும், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்தியப்பிரியாவும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 26 பேர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டன. காலை முதலே காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவைவிட அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார். 22-வது சுற்று முடிவில் அவர், 3,18,626 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்து வந்தார். அந்த சுற்று முடிவில் கார்த்தி சிதம்பரம் 5,42,393 வாக்குகள் பெற்று வெற்றி முகத்தில் இருந்தார். எச்.ராஜா 2,23,767 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.
இதே போல் அ.ம.மு.க. 1,17,560 வக்குகளும், நாம் தமிழர் கட்சி 69,176 வாக்குகளும், மக்கள் நீதிமய்யம் 22,209 வாக்குகளும் பெற்றிருந்தன.
Related Tags :
Next Story