கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் வெற்றி
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் வெற்றி பெற்றார். அவர், அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமியை 1½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்றது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி, தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் செல்லகுமார், அ.ம.மு.க. சார்பில் கணேசகுமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் காருண்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் மதுசூதனன் உள்பட 15 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 87 ஆயிரத்து 364 பேரும், பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 68 ஆயிரத்து 912 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 35 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 56 ஆயிரத்து 311 பேர் வாக்களித்தனர். தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வாக்கு எண்ணிக்கை
இந்தநிலையில் நேற்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் செல்லகுமார் முன்னிலையில் இருந்தார். அவருக்கு அடுத்த இடத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி இருந்தார். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மதுசூதனன், மக்கள் நீதி மய்யம் காருண்யா ஆகியோர் இருந்தனர். ஒவ்வொறு சுற்று முடிவிலும் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
அனைத்து சுற்றுகளின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் 6,04,911 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி 4,49,033 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் கே.பி.முனுசாமியை 1,55,878 வாக்குகள் வித்தியாசத்தில் செல்லகுமார் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மொத்த ஓட்டுகள்
வேட்பாளர்கள் பெற்ற மொத்த ஓட்டுகள் விவரம்:-
1. செல்லகுமார் (காங்கிரஸ்) - 6,04,911
2. கே.பி.முனுசாமி
(அ.தி.மு.க.) - 4,49,033
3. மதுசூதனன்
(நாம் தமிழர்) - 27,665
4. காருண்யா
(மக்கள் நீதி மய்யம்) - 16,765
5. கணேசகுமார்
(அ.ம.மு.க.) - 8806
6. சீனிவாசா (சுயே) - 5825
7. கோவிந்தன் (சுயே) - 5276
8. மீனா (சுயே) - 2536
9. நாகேஷ் (சுயே) - 1620
10. தேவப்பா ( சுயே) - 1561
11. குமரேசன் (சுயே) - 1245
12. குப்பன் (சுயே) - 1065
13. காந்தி (சுயே) - 928
14. அஸ்லம் ரகுமான் செரிப்
(சுயே) - 811
15. ஏஜாஸ் (சுயே) - 675
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நோட்டாவுக்கு மட்டும் 19,591 வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் செல்லகுமார், கே.பி.முனுசாமி, மதுசூதனன் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் நோட்டாவை விட குறைவான வாக்குகளே பெற்றுள்ளனர்.

Related Tags :
Next Story