மாவட்ட செய்திகள்

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை + "||" + Two women suicide in different places in Salem

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சேலம்,

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் சந்தியா (வயது 20). இவருக்கு 2 அண்ணன்கள் உள்ளனர். இதில் ஒருவர் உடல்நிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இவர் சில நேரங்களில் அவருடைய பெற்றோரை தாக்குவதாக தெரிகிறது. இதன் காரணமாக சந்தியா மனவேதனை அடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சந்தியாவின் சகோதரர் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் சந்தியா வீட்டில் மனவேதனையடைந்து தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சந்தியாவுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

சேலம் பள்ளப்பட்டி அங்கம்மாள் காலனி குப்தா நகரை சேர்ந்தவர் முத்துகுமார். இவருடைய மனைவி சபரி (28). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் சம்பவத்தன்று சபரிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தூக்குப்போட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர் சபரியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சபரி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்
தக்கலை அருகே, மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கொத்தனார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2. சேந்தமங்கலம் அருகே பரபரப்பு 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
சேந்தமங்கலம் அருகே 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. முகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம்; மனமுடைந்த பெண் பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தற்கொலை முயற்சி
கே.ஆர்.பேட்டை தாலுகாவில் முகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓடிவிட்டதால் மனமுடைந்த பெண் தனது பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. ஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை
ஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
5. வெவ்வேறு இடங்களில் முதுகலை பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு இடங்களில் முதுகலை பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...