தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி: பா.ஜனதா வேட்பாளர் தமிழிசையைவிட 3½ லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார்

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, பா.ஜனதா வேட்பாளர் தமிழிசையைவிட 3½ லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதி ஆகும். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி, பா.ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் ஆகிய முக்கிய தலைவர்கள் போட்டியிட்டதால் இந்த தொகுதி தமிழகத்தில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இத்தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் புவனேசுவரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொன்குமரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் உள்பட 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று எண்ணப்பட்டன. முதலில் இங்கு வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடந்தது. 37 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால் வாக்குகள் எண்ணுவதற்கு ஊழியர்கள் சிரமப்பட்டனர். ஒரு சில வாக்குகள் எண்ணிக்கையில் குளறுபடி நடந்தது. இதனால் சுற்றுவாரியாக வாக்குப்பதிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இருந்தபோதிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தி.மு.க. வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் இருந்தார். அவர் சராசரியாக ஒவ்வொரு சுற்றுக்கும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இதனால் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர். முடிவில் கனிமொழி 5,63,143 ஓட்டுகள் வாங்கினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 2,15,934 ஓட்டுகளை பெற்றார். இவரைவிட 3,47,209 வாக்குகள் அதிகம் பெற்று கனிமொழி வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விவரம் வருமாறு:-
1) கனிமொழி (தி.மு.க.)-5,63,143, 2) தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜனதா)-2,15,934, 3) புவனேசுவரன் (அ.ம.மு.க.)-76,886, 4) கிறிஸ்டன்டைன் ராஜசேகர் (நாம்தமிழர் கட்சி)-49,222, 5) பொன்குமரன் (மக்கள்நீதிமய்யம்)-25,702, 6) சுபாஷினி மள்ளத்தி (சுயே.)-8,109, 7) சிவனேசுவரன் (சுயே.)-5,252, 8) சங்கரலிங்கம் (சுயே.)-3029, 9) எம்.மகாராஜன் (பிரகதிசில் சமாஜ்வாடி கட்சி லோகியா)-2,922, 10) சிவா (பகுஜன் சமாஜ் கட்சி)-2927, 11) காபிரியேல் ஜேம்ஸ் பெர்ணான்டோ (பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா )-2,549, 12) ராஜகுமார் நாயுடு (தமிழ் தெலுங்கு நேஷனல் கட்சி)-2,516, 13) குரு (சுயே.)-2276, 14) சரவணன் (சுயே.)-2135, 15) அமலன் ராஜீவ் போனிபாஸ் (சுயே.)-2005, 16) பாலமுருகன் (சுயே.)-1699,
17) பா.ராமகிருஷ்ணன் (சுயே.)-1671, 18) ராஜலிங்கம் (சுயே.)-1866, 19) செல்வின் (சுயே.)-929, 20) அண்டோ ஹலரி (சுயே.)-924, 21) ஜெயகணேஷ் (நாம் இந்தியர்)-908, 22) பிரதீப் கணேசன் (சுயே.)-887, 23) ராஜ்குமார் போலையா (யுனிவர்சல் பிரதர்ஹூட் மூவ்மண்ட்)-689, 24) ரமேஷ் (சுயே.)-669, 25) பொன்ராஜ் (சுயே.)-560, 26) சன்மேன்(சுயே)-615, 27) ஜெர்மன்ஸ் (கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி)-494, 28) ரவிசங்கர் (சுயே.)-487, 29) சேனை நடராஜன் (சுயே.)-474, 30) ம.ராமகிருஷ்ணன் (சுயே.)-472, 31) லூடஸ் (சுயே.)-460, 32) பொன்னுச்சாமி (சுயே.)-436, 33) ஜேஸ்பர் ஞானமார்ட்டின் (சுயே.)-436, 34) மரகதராகவராஜ் (சுயே.)-428, 35) ஜெயராஜ் (சுயே.)-477, 36) ஜேம்ஸ் (சுயே.)-407, 37) நோட்டா-9234
தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழிக்கு அதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப்நந்தூரி வழங்கினார். அப்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. (தெற்கு), கீதாஜீவன் எம்.எல்.ஏ. (வடக்கு) ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கொடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினருக்கு நன்றி. இந்த வெற்றியை சாத்தியப்படுத்தி தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோருக்கும், கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. தூத்துக்குடி மாவட்ட மக்கள் சாதி, மதம் ஆகியவற்றை கொண்டு வாக்களிக்க மாட்டார்கள். அதை தாண்டி யார் இந்த நாட்டுக்காக உண்மையாக உழைக்கக்கூடியவர்கள் என்பதை புரிந்து கொண்டு தி.மு.க.வுக்கு வாய்ப்பளித்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றி. இந்த நாட்டில் தற்போது வந்துள்ள வெற்றி அலையை தாண்டி தி.மு.க. தமிழகத்தில் வெற்றி பெற்று உள்ளது. இது தமிழகம் தனித்தன்மையுடன் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

மத்தியில் வெற்றி பெற்ற பா.ஜனதாவிற்கும், மோடிக் கும் எனது வாழ்த்துகள். என்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜனை பற்றி விமர்சனம் செய்து அவரை காயப்படுத்த விரும்பவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னது போல், தமிழக மக்களுக்காக தி.மு.க. தொடர்ந்து போராடும். இங்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
வாக்கு எண்ணும் மையத்தில் மயங்கி விழுந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்பகுதியில் உள்ள வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இருந்தார். அப்போது, திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கு இருந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் முடிவுகள் தெரியாமல் தவிப்பு
தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கையின்போது வழக்கமாக ஒவ்வொரு சுற்று முடிவுகளும் மைக் மூலம் அறிவிக்கப்படும். ஆனால் இந்த தடவை முறையாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் வாக்குச்சாவடிக்கு வெளியே திரண்டு இருந்த அரசியல் கட்சியினர் உள்பட பலர் தேர்தல் முடிவுகள் தெரியாமல் தவித்தனர்.

Related Tags :
Next Story