ஈரோடு தொகுதியில் 18 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் - 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றி


ஈரோடு தொகுதியில் 18 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் - 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றி
x
தினத்தந்தி 23 May 2019 10:30 PM GMT (Updated: 24 May 2019 12:11 AM GMT)

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அ.கணேசமூர்த்தி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு போட்டியிட்டதில் 18 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

ஈரோடு,

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தலில், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. -. பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற ஜி.மணிமாறன் போட்டியிட்டார்.

இவர்களை தவிர கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சையினரும் என மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் வாக்காளர்களின் அமோக ஆதரவுடன் தி.மு.க. வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றி பெற்றார்.

அவருக்கு தபால் ஓட்டுகளுடன் சேர்த்து மொத்தம் 5 லட்சத்து 63 ஆயிரத்து 591 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. வேட்பாளர் மணிமாறனுக்கு 3 லட்சத்து 52 ஆயிரத்து 973 வாக்குகள் கிடைத்தன. இவரை விட 2 லட்சத்து 10 ஆயிரத்து 618 வாக்குகள் அதிகம் பெற்று அ.கணேசமூர்த்தி வெற்றிவாகை சூடினார்.

இவர்கள் 2 பேர் தவிர மற்ற 18 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

Next Story