செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்


செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 25 May 2019 4:30 AM IST (Updated: 24 May 2019 8:23 PM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி, 

நல்லம்பள்ளி அடுத்துள்ள தோக்கம்பட்டி கிராமத்தில் தனிநபருக்கு சொந்தமான நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. செல்போன் கோபுரத்தால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் செல்போன் கோபுரத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது கிராம மக்கள் எதிர்ப்பையும் மீறி செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதை கண்டித்தும், கோபுரத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் நேற்று தோக்கம்பட்டியில் பெருமாள் கோவில் மேட்டிற்கு செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் விரைந்து சென்று, கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கைவிட்டு கலைந்து சென்றனர். கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story