38-வது நினைவு தினம் அனுசரிப்பு: திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38-வது நினைவு தினத்தையொட்டி திருச்செந்தூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செந்தூர்,
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கல்லூரிகள் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சண்முகவல்லி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையாராஜ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நற்பணி மன்ற ஆயுட்கால உறுப்பினர் அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மாநில தலைவர் விக்கிரமராஜா, சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில துணை தலைவர் மகேஷ்வரன், மாநில இணை செயலாளர் ஜெபஸ்திலகராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், மாவட்ட செயலாளர் செல்வின், மாவட்ட துணைத்தலைவர் யாபேஷ், தூத்துக்குடி மத்திய மாவட்ட கவுரவ ஆலோசகர் பாஸ்கரன், சென்னை நிர்வாகி முத்துகுமார், ஆறுமுகநேரி வியாபாரி ஐக்கிய சங்க தலைவர் தாமோதரன், துணைத்தலைவர் கிழக்கித்தியமுத்து, துணை செயலாளர் சேர்மலிங்கம், திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், துணை செயலாளர் அழகேசன், நிர்வாகிகள் பாலமுருகன், ராமகிருஷ்ணன், தங்ககுமார், ஜெயசீலன், திருச்செந்தூர் யாதவ வியாபாரிகள் சங்க தலைவர் ஆவின் சங்கர், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் வைரமுத்து, துணை செயலாளர் ராமன், முன்னாள் தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூரை அடுத்த காயாமொழியில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு ஊர் மக்கள் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பா.இராமச்சந்திர ஆதித்தனார் திருமண மண்டபத்தில் உள்ள பா.இராமச்சந்திர ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காயாமொழி ஊர் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், முப்புராதி அம்மன் கோவில் அக்தார் வரதராஜ ஆதித்தன், எஸ்.எஸ்.ஆதித்தன், குமரேச ஆதித்தன், கே.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், ஜெயக்குமார் ஆதித்தன், ராகவ ஆதித்தன், ராஜா ராமலிங்க ஆதித்தன், அச்சுதன் ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சிவபால் தலைமையில், சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தேரிகுடியிருப்பு ஊர் தலைவர் ஐகோர்ட் துரை, செயலாளர் பிரபாகரன், காயாமொழி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் (பொறுப்பு) அப்பாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story