திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 21,861 ஓட்டுகளை அள்ளிய நோட்டா 6–வது இடத்தை பிடித்தது


திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 21,861 ஓட்டுகளை அள்ளிய நோட்டா 6–வது இடத்தை பிடித்தது
x
தினத்தந்தி 25 May 2019 3:45 AM IST (Updated: 25 May 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களிக்கும் வாய்ப்பு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் இடம் பெற்று இருந்தது.

திருப்பூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மக்கள் நீதிமய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 12 பேர் போட்டி போட்டனர். இதில் கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்டு)– 5,08,725 வாக்குகளும், எம்.எஸ்.எம். ஆனந்தன் (அ.தி.மு.க.) – 4,15,357 வாக்குகளும் பெற்றனர்.

இந்த தொகுதியில் நோட்டாவிற்கு பெரும்பான்மையான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்திரகுமார் 64,657 வாக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செல்வம் 43,816 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகநாதா 42,189 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர். அதை தொடர்ந்து 6–வதாக நோட்டாவில் 21,861 வாக்குகள் பதிவாகி உள்ளன.


Next Story