3¼ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி காங்கிரஸ் கட்சி வசம் வந்த சிவகங்கை தொகுதி
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் 3¼ லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றியது.
சிவகங்கை,
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம், பா.ஜ.க. சார்பில் எச்.ராஜா, அ.ம.மு.க. சார்பில் தேர்போகி பாண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சினேகன், நாம் தமிழர் கட்சி சார்பில் சக்திபிரியா, பகுஜன்சமாஜ்கட்சி சார்பில் சரவணன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 26 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 3 லட்சத்து 32 ஆயிரத்து 244 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கடந்த 2014 தேர்தலில் 1,04,678 வாக்குகள் பெற்ற காங்கிரஸ், இந்த முறை நடைபெற்ற தேர்தலில் சுமார் 3¼ லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தொகுதியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தபால் ஓட்டுகள் சேர்த்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:–
கார்த்தி சிதம்பரம் (காங்) 5,66,104
எச்.ராஜா (பா.ஜ.க.) 2,33,860
தேர்போகி பாண்டி (அ.ம.மு.க.) 1,22,534
சக்திபிரியா (நாம் தமிழர்) 72,240
சினேகன் (மக்கள் நீதி மய்யம்) 22,931
சரவணன் (பகுஜன் சமாஜ் கட்சி) 5,079
சுப்பிரமணியன் (சுயே) 1,283
பிரபாகரன் (சுயே) 1,231
வெள்ளத்துரை (சுயே) 2,553
அந்தோணிசேசுராஜ் 1,191
காசிநாதன் (சுயே) 1,789
கார்த்திக் (சுயே) 1,422
சி.சரவணன் (சுயே) 2,097
சிங்கத்துரை (சுயே) 3,976
சிதம்பரம் (சுயே) 1,261
சின்னையா (சுயே) 1,248
செந்தமிழ்செல்வி (சுயே) 3,453
செந்தில்குமார் (சுயே) 4,690
செல்லக்கண்ணு (சுயே) 3,952
செல்வராஜ் (சுயே) 2,485
நடராஜன் (சுயே) 1,284
முகமதுரபீக் (சுயே) 1,441
ராதாகிருஷ்ணன் (சுயே) 905
ராஜசேகர் (சுயே) 2,140
ராஜா (சுயே) 2,869
ராஜேந்திரன் (சுயே) 1,1167
நோட்டா 9,283
தபால் ஓட்டுகள் 438