கூடுதலான அர்ப்பணிப்புடன் பயணம் தொடரும் - ரங்கசாமி அறிக்கை
கூடுதலான அர்ப்பணிப்புடன் பயணம் தொடரும் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும், தட்டாஞ்சாவடி சட்டசபை இடைத்தேர்தலிலும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும், தேர்தலில் உழைத்த கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், தலைவர்களுக்கும் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நன்றியை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தலில் 2-வது முறையாக பெருவெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்து 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடி, பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு எங்கள் இயக்கத்தின் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுவை மாநில மக்களின் வளர்ச்சிக்கும், நல்வாழ்வுக்கும் எங்கள் இயக்கத்தின் பயணம், கூடுதலான அர்ப்பணிப்புடன் தொடரும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ரங்கசாமி கூறியுள்ளார்.

Related Tags :
Next Story