திருச்சி ரெயில்வே மின்பாதை பராமரிப்பு என்ஜின் புதுப்பிப்பு
திருச்சி ரெயில்வே மின்பாதை பராமரிப்பு என்ஜின் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி கோட்டத்தில் ரெயில்வே பாதைகள் பெருமளவு மின்மயமாக்கப்பட்டு விட்டன. திருச்சி-சென்னை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்க பாதைகளில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல திருச்சி-தஞ்சாவூர் இடையே இரு வழி அகல ரெயில் பாதையிலும் மின்மயமாக்கப்பட்டு விட்டன. இந்த வழித்தடத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கடந்த சில மாதங் களுக்கு முன்பு ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினார். மேலும் மின்பாதையில் சிறு சிறு தவறுகளை சரி செய்ய அறிவுறுத்தி உள்ளார். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் விரைவில் மின்சார என்ஜின் பொருத்தி ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் திருச்சியில் ரெயில்வே மின்பாதைகளை பராமரிக்க ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் என்ஜின்கள் உள்ளது. இதில் ஒரு என்ஜின் திருச்சி ஜங்ஷன் குட்ஷெட் யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும். மின்பாதையில் திடீரென துண்டிப்பு ஏற்பட்டால் மற்றும் மின்கம்பிகள் சேதமடைந்தால் இந்த என்ஜினில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொள்வார்கள்.
மின்பாதையை பராமரிக்க பிரத்யேகமான இந்த என்ஜினில் உபகரண பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கும். மேலும் டீசலில் இந்த என்ஜின் இயக்கப்படும். இந்த நிலையில் மின்பாதை பராமரிப்பு என்ஜினை குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க வேண்டும். அதன்படி இந்த என்ஜின் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் என்ஜினுக்கு புதிய வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

Related Tags :
Next Story