திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வாக்கு வங்கி சரிந்தது ஏன்? - தே.மு.தி.க.வின் இளங்கோவன் ‘டெபாசிட் ’இழந்த பரிதாபம்
2 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிவடைந்தது ஏன்? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
திருச்சி,
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு என நீண்ட நெடிய வரலாறு உண்டு. இந்தியா குடியரசு நாடாக மாறிய பின்னர் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே இத்தொகுதி உள்ளது. ஆரம்பத்தில் இத்தொகுதியில் அனந்தன் நம்பியார், எம்.கல்யாண சுந்தரம் ஆகிய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் வெற்றி பெற்று உள்ளனர். அதன் பின்னர் 1980-ம் ஆண்டு, முதல் முறையாக தி.மு.க. வெற்றி பெற்றது. பல தேர்தல்களில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியை தொடர்ந்து அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு பெரிய கட்சிகளும் கூட்டணிக்கே ஒதுக்கி வந்திருக்கிறது. 1984, 1989, 1991 ஆகிய 3 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அடைக்கலராஜ் தொடர்ந்து வெற்றி பெற்றார். 1996 தேர்தலில் அடைக்கலராஜ் த.மா.கா. சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1980-ல் வெற்றி பெற்ற தி.மு.க. 34 ஆண்டுகளுக்கு பின்னர் 2014-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருடன் நேரடியாக மோதியது. இந்த தேர்தலில் தி.மு.க.வின் மு.அன்பழகனை அ.தி.மு.க.வின் ப.குமார் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். அதற்கு முன் 2009 தேர்தலிலும் இதே குமார் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சாருபாலா தொண்டைமானை சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார்.
இப்படி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தொடர் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வின் கூட்டணி வேட்பாளராக தே.மு.தி.க. சார்பில் களம் இறங்கிய டாக்டர் இளங்கோவன் இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட திருநாவுக்கரசரிடம் 4 லட்சத்து 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறார். திருநாவுக்கரசர் பெற்ற மொத்த வாக்குகள் 6,21,285. இளங்கோவன் பெற்ற வாக்குகள் 1,61,999. மொத்தம் பதிவான செல்லுபடியாக கூடிய வாக்குகளான 10,33,625-ல் ஆறில் ஒரு பகுதியான 1,72,270 வாக்குகளுக்கும் குறைவாகவே இளங்கோவன் பெற்று இருந்ததால் அவர் ‘டெபாசிட்’ தொகையை இழந்துள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இது அ.தி.மு.க.வுக்கு நல்ல வாக்கு வங்கி உள்ள ஒரு தொகுதியாகும். அதனால் தான் 2009 மற்றும் 2014 தேர்தல்களில் தொடர் வெற்றியை பெற முடிந்தது. அதுவும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் குமார் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போது இத்தொகுதிக்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய 5 தொகுதிகளிலும் எதிர்த்து போட்டியிட்ட சாருபாலா தொண்டைமான் அதிக வாக்குகள் பெற்றிருந்த நிலையிலும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பெற்ற சுமார் 22 ஆயிரம் வாக்குகள் மட்டுமே குமார் வெற்றி பெறுவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது.
அதன் காரணமாகவே 2011 சட்டமன்ற பொது தேர்தலில் ஜெயலலிதா, தான் போட்டியிடுவதற்கு இத்தொகுதியே பாதுகாப்பானது என தேர்வு செய்து போட்டியிட்டார், வெற்றி பெற்றார். முதல்- அமைச்சரானார். அவர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்து பதவி பறி போனதால் நடைபெற்ற இடைத்தேர்தலிலும், 2016 சட்டமன்ற பொது தேர்தலிலும் கூட அ.தி.மு.க.வே இத்தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்படி அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்பட்டு வந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கூட நடந்து முடிந்துள்ள தேர்தலில் தே.மு.தி.க.வின் இளங்கோவனுக்கு கை கொடுக்கவில்லை. இளங்கோவனை விட திருநாவுக்கரசர் இத்தொகுதியில் மட்டும் சுமார் 68 ஆயிரம் வாக்குகளை கூடுதலாக பெற்று உள்ளார். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் இளங்கோவனை விட திருநாவுக்கரசருக்கு அதிகபட்சமாக சுமார் 83 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக கிடைத்து உள்ளது.
தனது கூட்டணி கட்சியான தே.மு.தி.க, காங்கிரசிடம் தோல்வியை தழுவியது மட்டும் இன்றி ‘டெபாசிட்’டையும் இழந்து பரிதாபமாக நிற்பது திருச்சி அ.தி.மு.க. வினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. வாக்கு வங்கி சரிவடைந்தது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

Related Tags :
Next Story