கோட்டூர் அருகே, துணை போலீஸ் சூப்பிரண்டை தாக்க முயன்ற 4 பேர் கைது


கோட்டூர் அருகே, துணை போலீஸ் சூப்பிரண்டை தாக்க முயன்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 May 2019 4:00 AM IST (Updated: 25 May 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே துணை போலீஸ் சூப்பிரண்டை தாக்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் சத்திரம் அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார், 4 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் கெழுவத்தூரை சேர்ந்த பிரபு(வயது35), ஜெயசீலன் (40), மணிகண்டன் (21), அஜித் (22) என்பதும், இவர்கள் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

துணை போலீஸ் சூப்பிரண்டு தங்களிடம் விசாரணை செய்ததால் ஆத்திரம் அடைந்த 4 பேரும், அவரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்றனர்.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் பிரபு, ஜெயசீலன், மணிகண்டன், அஜித் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story