நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பூட்டி ‘சீல்’ வைப்பு
நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. விழுப்புரம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியிலும், கள்ளக்குறிச்சி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அங்குள்ள ஏ.கே.டி. பொறியியல் கல்லூரியிலும் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததையடுத்து தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து லாரிகள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறையை அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சுப்பிரமணியன் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story