கோவில்பட்டி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது
கோவில்பட்டி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 29-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.
கோவில்பட்டி,
இதுகுறித்து கோவில்பட்டி அரசு கல்லூரி முதல்வர் தீபா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-2020-ம் கல்வி ஆண்டிற்கான மாணவ- மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 29-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.
அன்று காலை 10 மணிக்கு அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறும். இதில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், என்.சி.சி., விளையாட்டு பிரிவைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
அன்று மதியம் 2 மணிக்கு ஆங்கில பாடப்பிரிவிற் கான கலந்தாய்வு நடக் கிறது.
வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தமிழ் பாடப்பிரிவுக்கும், மதியம் 2 மணிக்கு வணிகவியல் பாடப்பிரிவிக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வரலாறு பாடப்பிரிவுக்கும், மதியம் 2 மணிக்கு கணினி அறிவியல், புவி அமைப்பியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story