மாவட்ட செய்திகள்

தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Mother spoke on cellphone Son Suicide by hanging

தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை

தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை
உத்திரமேரூரில் தாய் யாருடனோ அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூர்,

உத்திரமேரூர் வாழைத்தோட்ட தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சித்ரா (வயது 37) என்ற மனைவியும், சக்திவேல் (17) என்ற மகனும் உள்ளனர்.

லோகநாதன் இறந்த பிறகு சித்ரா அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சித்ரா அடிக்கடி செல்போனில் அதிகநேரம் பேசிவந்துள்ளார். இது சக்திவேலுக்கு பிடிக்காததால் தாயும், மகனும் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.


இந்தநிலையில் நேற்று முன்தினம் சித்ரா செல்போனில் யாரிடமோ சிரித்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சக்திவேல் அவரிடம் சண்டையிட்டதாக தெரிகிறது.

2 பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. இதில் மனமுடைந்த சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சக்திவேலின் உறவினர்கள் உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை