சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 25 May 2019 10:30 PM GMT (Updated: 25 May 2019 7:57 PM GMT)

மன்னார்குடி பாமணி ஆறு கீழபாலம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாமணி ஆறு கீழபாலம் பகுதி உள்ளது. இப்பாலத்தின் அருகில் மேற்கு பகுதியில் சாலையையொட்டி குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் இப்பகுதியில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் நீண்ட நாட்கள் அள்ளப்படாமல் உள்ளது. இப்பகுதியில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது.

அகற்ற வேண்டும்

சில நேரங்களில் காற்று அடிக்கும்போது குப்பைகள் பறந்து வாகன ஓட்டிகளின் மீது விழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story