நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பந்தல் தொழிலாளி பலி கார் மோதியது


நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பந்தல் தொழிலாளி பலி கார் மோதியது
x
தினத்தந்தி 26 May 2019 3:45 AM IST (Updated: 26 May 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பந்தல் தொழிலாளி கார் மோதி இறந்தார்.

நன்னிலம்,

நாகை மாவட்டம் தென்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). பந்தல் காண்டிராக்டர். சம்பவத்தன்று இவரும், இவருடைய நண்பர் பந்தல் தொழிலாளி ராஜகோபால் (60) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சன்னாநல்லூரில் இருந்து திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ராஜேந்திரன் ஓட்டியுள்ளார். செம்பிய மழலை பிரிவு சாலை அருகே சென்றபோது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் ராஜகோபால், ராஜேந்திரன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகோபால் உயிரிழந்தார். ராஜேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story