சீர்காழி அருகே மனைவியை தீவைத்து கொளுத்திய கொத்தனார் கைது


சீர்காழி அருகே மனைவியை தீவைத்து கொளுத்திய கொத்தனார் கைது
x
தினத்தந்தி 26 May 2019 3:45 AM IST (Updated: 26 May 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே மனைவியை தீவைத்து கொளுத்திய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 36). கொத்தனார். இவருக்கும், அகனி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா (24) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கேரளாவில் வேலை பார்த்து வந்த செந்தில், 2 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். வீட்டிற்கு வந்த அவர் ரூ.2 ஆயிரத்தை மனைவியிடம் கொடுத்தார்.

அதனை கவுசல்யா தனது மகளின் மருத்துவத்திற்கு செலவு செய்து விட்டார். இதுதொடர்பாக நேற்று கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கவுசல்யா தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைக்க முயன்றார். பின்னர் சமாதானம் அடைந்த கவுசல்யா, மண்எண்ணெய்யுடன் இருந்த ஆடைகளை மாற்ற முயன்றபோது செந்தில், தீக்குச்சியை கொளுத்தி கவுசல்யா மீது போட்டுள்ளார். இதனால் தீ கவுசல்யாவின் உடல் முழுவதும் பற்றி எரிந்தது.

கைது

இதில் பலத்த தீக்காயம் அடைந்த கவுசல்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு, வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story