சேலத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி 64 அணிகள் பங்கேற்பு


சேலத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி 64 அணிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 May 2019 3:15 AM IST (Updated: 26 May 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் போலீஸ் -பொதுமக்கள் இடையேயான நல்லுறவு கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில் 64 அணிகள் பங்கேற்கின்றன.

சேலம், 

சேலம் மாநகர போலீசார் சார்பில் நடைபெறும் போலீஸ்-பொதுமக்கள் இடையேயான நல்லுறவு கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. சேலம் லைன்மேடு ஆயுதப்படை மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை போலீஸ் கமிஷனர் சங்கர் தொடங்கி வைத்தார்.

இதேபோல் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கரும், சூரமங்கலத்தில் உள்ள நீலாம்பாள் பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியை துணை கமிஷனர் தங்கதுரையும் தொடங்கி வைத்தனர்.

மாவட்டத்தில் இருந்து மொத்தம் 64 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. இறுதி போட்டி வருகிற 2-ந் தேதி மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.25 ஆயிரமும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரமும், 3-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.7,500-ம், 4-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த தொடரில் போலீசார் தரப்பில் இருந்தும் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. அவற்றில் முதலிடம் பிடிக்கும் அணியும், பொதுமக்கள் தரப்பில் முதலிடம் பிடிக்கும் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு தனியாக ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது.

Next Story