விற்பனைக்கு வீட்டில் பதுக்கிய 113 மதுபாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது


விற்பனைக்கு வீட்டில் பதுக்கிய 113 மதுபாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது
x
தினத்தந்தி 26 May 2019 4:00 AM IST (Updated: 26 May 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே எட்டணி பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்வதாக கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கருங்கல்,

கருங்கல் அருகே எட்டணி பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்வதாக கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லையா தலைமையிலான போலீசார் எட்டணி சிறுகாட்டுவிளை பகுதியை சேர்ந்த டேவிட் (வயது 56) என்பவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு 113 மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 113 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து டேவிட்டை கைது செய்தனர்.

Next Story