மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை; அச்சக தொழிலாளி கைது
சிவகாசி அருகே மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அச்சக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 58). அச்சக தொழிலாளி. இவர் 9–ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவியை அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மிரட்டி பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது பெண் ஒருவர் மாணவியின் வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்து அச்சக தொழிலாளி லோகநாதன் தப்பியோடி விட்டார். பின்னர் நடந்த சம்பவத்தை கூறி மாற்றுத்திறனாளி மாணவி அழுதுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அச்சக தொழிலாளி லோகநாதனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story