முன்குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள்
முன்குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை,
இதுதொடர்பாக நெல்லை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நெல்லை மாவட்டத்தில் முன்குறுவை பருவ நெல் சாகுபடி சுமார் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாகுபடிக்கு ஏற்ற அம்பை 16, டி.பி.எஸ். 5, ஏ.டி.டி. 45 போன்ற நெல் ரகங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே முன்குறுவை பருவ சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானியத்தில் நெல் விதைகளை பெற்று கொள்ளலாம். மேலும் நெல் நாற்று பரவுவதற்கு முன்பு ஒரு கிலோ நெல் விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். இதனால் விதைகள் மூலம் பரவும் நோய்களில் இருந்து நெல் பயிரினை பாதுகாக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story