நெல்லை டவுனில் திருட்டை தடுக்க பொதுமக்களே வைத்த கண்காணிப்பு கேமரா


நெல்லை டவுனில் திருட்டை தடுக்க பொதுமக்களே வைத்த கண்காணிப்பு கேமரா
x
தினத்தந்தி 27 May 2019 3:30 AM IST (Updated: 27 May 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுனில் திருட்டை தடுக்க பொதுமக்களே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.

நெல்லை, 

நெல்லை டவுன் வழுக்கோடை அருகே முகமது அலி தெரு உள்ளது. இங்கு அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. மேலும் வீட்டில் உள்ள நகைகள், பணம், பொருட்களும் திருட்டு போனது. சமீபத்தில் அங்கு திருட முயற்சி செய்த ஒரு கொள்ளையனை பொது மக்கள் பிடித்து டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து திருட்டை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகள் நுழையாமல் பாதுகாக்கவும் அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறு போலீசார் ஆலோசனை கூறினர்.

இதையொட்டி முகமது அலி தெரு மக்கள் பணத்தை சேர்த்து 10 கண்காணிப்பு கேமராக்கள், அகன்ற திரை கொண்ட டி.வி. மற்றும் காட்சி சேமிப்பு பெட்டி ஆகியவற்றை வாங்கினார்கள். இதற்கு டவுன் போலீசாரும் உதவி செய்தனர்.

இதன் தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு த.மு.மு.க. நிர்வாகி ஜாபர் தலைமை தாங்கினார். ஜமாத் தலைவர் மகபூப் ஜான், செயலாளர் ஜாகீர்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story