நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 26 May 2019 10:30 PM GMT (Updated: 26 May 2019 7:22 PM GMT)

கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் உள்ள ஜெகநாதபெருமாள் கோவிலில் வைகாசி விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாதன்கோவிலில் பிரசித்தி பெற்ற ஜெகநாதபெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி பல்வேறு வாகனங்களில் சாமிபுறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக தேரில் பெருமாள், தாயார் எழுந்தருளினர். தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புஷ்ப யாகம்

தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. அப்போது வீதியில் திரண்டிருந்த பக்தர்கள் தேரில் எழுந்தருளிய பெருமாளை வழிபட்டனர். மாலை புஷ்ப யாகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சாமி உள்பிரகார புறப்பாடு, திருமஞ்சனம், நாலாயிர திவ்ய பிரபந்த சேவை நடைபெற்றது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்து இருந்தனர்.

Next Story