பரமக்குடி அருகே வயல்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் மான்கள்
பரமக்குடி அருகே வயல்களுக்குள் புகுந்து பயிர்களை மான்கள் நாசம் செய்து வருகின்றன.
பரமக்குடி.,
பரமக்குடி அருகே சுந்தனேந்தல் வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. தற்போது கடும் வெயில் கொடுமையாலும், மழை இல்லாததாலும் அந்த வனப்பகுதி வறண்டு போய் கிடக்கிறது. இதனால் தண்ணீர் குடிக்கவும், உணவு உண்பதற்காகவும் ஏராளமான மான்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குள் செல்கின்றன. அப்போது நாய்கள் விரட்டியும், கடித்தும், மான்கள் இறந்து விடுகின்றன.
தற்போது அங்குள்ள மான்கள் உணவு கிடைக்காமல் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கமுதக்குடி, கீழப்பெருங்கரை, மேல் பெருங்கரை உள்பட சுற்றியுள்ள கிராமங்களில் வயல்களில் வளர்ந்துள்ள பருத்தி, கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றை தின்று நாசம் செய்கின்றன. இதனால் சுமார் 20 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பயிரிட்டுள்ள அந்த பயிர்கள் நாசமாகி விட்டன. நன்கு பூ பூத்து, காய் காய்த்து பயன் தரும் நிலையில் உள்ள பயிர் செடிகளை நாசம் செய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மிஞ்சியுள்ள பயிர்களை மான் கூட்டங்களிடம் இருந்து காப்பாற்ற இரவுபகலாக வயல்களில் அமர்ந்து விவசாயிகள் காவல் காத்து வருகின்றனர்.
மான்களால் நாசமான பயிர்களை வேளாண்மைத் துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு மான்களை பாதுகாக்கவும், அவைகளுக்கு தேவையான குடிநீரை வழங்க குடிநீர் தொட்டிகளையும் வனத்துறையினர் அமைத்துக் கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story